
பிரதோஷம் என்றால் சிவனுக்கும் நந்திக்கும் நடைபெறும் வழிபாடு.ஆனால் பிரதோஷம் அபிஷேகம் பூஜை கடைபிடிக்கப்படும் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது.மதுரை அருகே உள்ள யோக நரசிம்மர் கோயிலில் பிரதோஷ அபிஷேக ஆராதனை பூஜை வழிபாடுகள் விமர்சையாக நடைபெறும்.இன்று புரட்டாசி பிரதோஷ நாளில் யோக நரசிம்மரை வழிபடுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.
மதுரையில் அமைந்துள்ளது யானைமலை யோக நரசிம்மர் திருக்கோயில். குடைவறை கோயிலாக அமைந்துள்ள இத்தலத்தில் மிகவும் பெரிய நரசிம்ம பெருமானின் உருவம் உள்ளது.
பெரிய குடைவறை கோயில் என்ற பெருமை உடையது. பெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த சிறப்பு வாய்ந்த தளம்.
மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு நோக்கியும், நரசிங்கவல்லி தாயார் மேற்கு பார்த்தும் அருள்பாலிக்கின்றனர்
இந்த கோயிலில் குடைவறையாக அமைந்துள்ளதோடு, கருவறைக்கு மேல் மிகவும் உயர்ந்த யானை மலை உள்ளது அதனால் கொடி மரம் வைக்கப்படவில்லை.
திருவிழா மற்றும் விஷேசங்கள் இக் கோயிலில் பிரபலமான ஒன்றாகும்.எல்லா சிவன் கோயில்களிலும் பிரதோஷம் தினத்தை மிகவும் விமர்சையாக கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். ஆனால் பெருமாள் கோயிலில் பிரதோஷம் கடைப்பிடிக்கப்படுகிறதென்றல் அது இந்த கோயில் தான்.மாசி மாத பெளர்ணமி அன்று இந்த கோயிலில் அமைந்துள்ள பெரிய தெப்பத்தில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
108 திவ்ய தேசத்தில் ஒன்றான திருமோகூர் காளமேகப் பெருமாள் இங்கு எழுந்தருளி முதலையிடம் இருந்து கஜேந்திரனை காப்பாற்றும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் சிற்பபாக கொண்டாடப்படுகிறது.திருவண்ணாமலைப் போல பெளர்ணமி கிரிவலம் சிறப்பாக நடக்கிறது.
பிரதோஷம் கொண்டாடும் கோயிலில் இந்த பெருமாள் கோயில் மிக முக்கியமான ஸ்தலமாக விளங்குகிறது.
சுவாதி திருமஞ்சனம் மற்றும் பிரதோஷ திருமஞ்சனம் செய்யப்படுகிறது. நரசிம்ம பெருமான் பிரதோஷ தினத்தின் 4.30 முதல் 5.30க்குள் அவதரித்ததாக கூறப்படுகிறது. இதனால் இங்கு பிரதோஷம் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு சனிக்கிழை தினத்தில் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கி செல்கின்றனர். படிப்பு, தொழில், செல்வத்தை அள்ளித்தருவதால் கோயிலைத் தேடி பல பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த கோயிலின் எதிரே உள்ள சிறிய குன்றில் பாலமுருகன் ஆலையம் உள்ளது. அதன் பின்புறம் பிரத்யங்கரா கோயிலும் உள்ளது.யானைமலையின் வால் பகுதியில் பாண்டுரங்கன் ஆலையம் மிகவும் அமைதி நிலவும் மன நிம்மதி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணிக்கு வந்தால், அங்கிருந்து அரும்பனூர் செல்லும் சிற்றூந்து அடிக்கடி உள்ளது. பெரியார் நிலையத்திலிருந்து யானைமலை நரசிங்கம் கோயில் என அரசு பேருந்தும் இயக்கப்படுகின்றது. இந்த பேருந்தும் மாட்டுத்தாவணிக்கு சென்று தான் செல்லும்.
