

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5மணிக்குதிறக்கப்பட்டது.கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் சபரிமலை நடைபயணத்தை மேற்கொண்டனர்நாளை முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் நடைபெறவுள்ள சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பூஜைக்காக, இன்று 17ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.தந்திரி முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வைத்து, விளக்கேற்றி தீப விளக்கேற்றிவைத்தார்.
கோயில் நடை வரும் 22ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.பக்தர்கள் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி முன்பதிவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.இதற்கு பின் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி கோவில் நடை திறக்கப்படும்.