
கடந்த 7 மாதத்தில் திருப்பதியில் வசூலான உண்டியல் வருவாய் எவ்வளவு தெரியுமா? கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையானை சரியாக தரிசனம் செய்யாததால் விரக்தியில் இருந்த பக்தர்கள் திருப்பதிக்கு வர குவிய தொடங்கினர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.7 மாதத்தில் மட்டும் 1 கோடியே 53 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ.911.19 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.
திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களில் குறைந்த அளவு பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது மாதத்திற்கு ரூ.10 கோடி வரை மட்டுமே உண்டியல் காணிக்கையாக வசூலானது. கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து படிப்படியாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
இதனால் தேவஸ்தானத்திற்கு உண்டியல் வருவாய், ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட், ஸ்ரீவாணி அறக்கட்டளை மற்றும் அறை வாடகை மூலம் போதிய அளவு வருவாய் கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையானை சரியாக தரிசனம் செய்யாததால் விரக்தியில் இருந்த பக்தர்கள் திருப்பதிக்கு வர குவிய தொடங்கினர்.
தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் அதிகளவிலான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 19.72 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.128.61 கோடியும், ஏப்ரல் மாதம் 20.62 லட்சம் பக்தர்களும், ரூ.127.63 கோடியும், மே மாதம் 22.68 லட்சம் பக்தர்களும், ரூ.130.29 கோடியும் உண்டியலில் காணிக்கையாக வசூலானது. ஜூன் மாதம் 23.23 லட்சம் பக்தர்களும், ரூ.123.74 கோடியும், ஜூலை மாதம் 23.45 லட்சம் பக்தர்களும், ரூ.139.46 கோடியும், ஆகஸ்டு மாதம் 22.80 லட்சம் பக்தர்களும், ரூ.140.07 கோடியும் செப்டம்பர் மாதம் 21.12 லட்சம் பக்தர்களும் ரூ.122.19 கோடியும் உண்டியல் காணிக்கையாக வசூலானது. கடந்த 7 மாதத்தில் மட்டும் 1 கோடியே 53 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ.911.19 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது. ஆகஸ்டு மாதம் மட்டும் ரூ.140 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகி ஒரே மாதத்தில் அதிகளவில் உண்டியல் வசூல் என்று சாதனை படைத்துள்ளது.