

மதுரை அருகே திருமங்கலத்தை அடுத்த அழகு சிறை கிராமத்தில் இன்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலம் அடுத்த அழகு சிறை கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று இங்கு திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 5 அறைகள் முழுவதும் தரைமட்டமானது. இதில் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் வெடித்துச் சிதறி பலியாகினர். இவர்கள் அம்மாசி, வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா என தெரிய வந்ததுள்ளது.
மேலும் 13 பேர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த மதுரை மற்றும் திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.


விபத்து குறித்து வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உள்ளிட்டோர் நேரடியாக வந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்-:
மதுரை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் ட்விட்டர் பதிவில், ‘மதுரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விபத்த்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ எனக் கூறியுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி-: