
சென்னை வட தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகனமழைக்கு வாய்ப்பு-உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை நீடித்தது. வரும் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தார் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை நீடித்தது. வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கத்தில், அண்ணாசாலை, ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வடதமிழகம்ல, புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிப்பால் 10.30மணி அளவில் 500கனஅடி நீர் திறக்கப்படுகிறது.ஏற்கனவே 10 நாட்களாக புழல் ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சென்னை நாரவாரிகுப்பம், கிராண்டலைன், சாமியார் மடம், தண்டல் கழனி, வடபெரும்பாக்கம், மணலி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே புழலேரி உபரிநீர் செல்ல உள்ளதால் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்
வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியானது அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.