
- நாட்டின் 5வது வழித்தடமாக சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
- இந்த ரயில் வாரத்தில் 6 நாட்களுக்கு சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
பெங்களூரு – சென்னை வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
தென் இந்தியாவில் முதன்முறையாக சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் அதிவிரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.அத்துடன் சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தை திறந்துவைத்தார். பிரதமர் மோடி நாளை காலை 9 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். பிரதமர் மோடியை கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, கவர்னர் தாவர்சந்த் கெலாட், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் .

அதன் பிறகு அவர் அங்கிருந்து கார் மூலம் விதான சவுதாவுக்கு சென்றார்.அங்கு எம்.எல்.ஏ.க்கள் பவமில் கனகதாசர் ஜெயந்தியையொட்டி அங்குள்ள கனகதாசர் மற்றும் வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு சென்றார் அங்கு சென்னை-மைசூரு வந்தேபாரத் அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
அத்துடன் அதே இடத்தில் பாரத் கவுரவ் காசி தரிசன ரெயில் சேவையையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இது தென் இந்தியாவின் முதல் வந்தேபாரத் ரெயில் ஆகும். இந்திய தொழில்நுட்பத்தில் அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த ரெயில் சென்னையில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மைசூருவுக்கு வந்தடைகிறது. மறுமார்க்கமாக மைசூருவில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரெயிலில் பயணித்தால் சென்னையில் இருந்து மைசூருவுக்கு 6.40 மணி நேரத்தில் வந்துவிடலாம்.வாரத்தில் 6 நாட்களுக்கு சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.