இன்று நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் திடீர் வாபஸ் ஆகியுள்ளது. இன்று 3-வது சனிக்கிழமை என்பதால் வங்கியில் வேலை நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
வங்கிகளில் ஒப்பந்த அடிப்படையில் வெளியில் இருந்து அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை எடுத்து பணியில் அமர்த்துவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை (19-ம் தேதி) நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளனர்.
இது தொடர்பான அறிவிப்பை இந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கம் வெளியிட்டிருந்தது. நாளை 3-வது சனிக்கிழமை என்பதால் வங்கியில் வேலை நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, வங்கி வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என மத்திய அரசு அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, நாளை நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு உள்ளது என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.