பத்தனம்திட்டா லாஹாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து, பக்தர்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டனர். இந்த விபத்தில் 8வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடா மேற்கு கோதாவரியை சேர்ந்தவர்கள் இன்று பஸ்ஸில் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்ல யாத்திரை மேற்கொண்டனர்.இந்த பஸ் கேரள பத்தனம்திட்டா லாஹாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு வயது மணிகண்டன் உயிரிழந்தார்.
விஜயவாடா மேற்கு கோதாவரியை சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர். பஸ்ஸில் 44 பேர் இருந்தனர். 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். காயமடைந்த 10 பேர் பெருநாடு தாலுகா மருத்துவமனையிலும், 7 பேர் பத்தனம்திட்டா பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.