தமிழர்களின் பாரம்பரிய நூலான திருக்குறள் 13 மொழிகளில் பெயர்க்கப்பட்ட புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி காசி- தமிழ் சங்கமம் விழாவில் சனிக்கிழமை இன்று வெளியிட்டார்.
திருக்குறள் மொழி பெயர்ப்பு நூலை பிரதமர் அறிமுகம் செய்ய, மேடையில் இருந்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட அனைவரும் பெற்றுக்கொண்டனர்.
காசிக்கும் தமிழகத்திற்குமிடையே உள்ள பழமையான தொடா்பை மீண்டும் கண்டறிந்து, உறுத்திப்படுத்திக் கொண்டாடும் நோக்கத்துடன் ’காசி- தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சிகள் வாரணாசியில் (காசி) நவம்பா் 17 -ஆம் தேதி முதல் டிசம்பா் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை இன்று (நவ.1) முறைப்படி தொடக்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இளையராஜாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய வாத்தியங்களுடன் கூடிய பாடல்கள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய நூலான திருக்குறள் 13 மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அறிஞா்கள், மாணவா்கள், தத்துவவாதிகள், வா்த்தகா்கள், கைவினைஞா்கள், கலைஞா்கள் உள்பட பல்வேறு தரப்பட்ட மக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
”சம்போ.. சிவ சம்போ..” காசி – தமிழ் சங்கமம் விழாவில் பாடிய இளையராஜா
தமிழ் சங்கமம் விழா தொடக்க நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற கச்சேரியில் இளையராஜா பாடல் பாடினார்.
நாட்டின் மிக முக்கியமான மற்றும் புராதன பகுதியான காசிக்கும் தமிழகத்திற்குமிடையே உள்ள பழமையான தொடா்பை மீண்டும் கண்டறிந்து, உறுத்திப்படுத்திக் கொண்டாடும் நோக்கத்துடன் ’காசி- தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சிகள் வாரணாசியில் (காசி) நவம்பா் 17 -ஆம் தேதி முதல் டிசம்பா் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இன்று (நவ.19) தொடங்கி எவைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இதில், நான் கடவுள் திரைப்படத்தில் இடம்பெற்ற ”சம்போ.. சிவசம்போ..” எனத் தொடங்கும் பாடலை இளையராஜா தனது குழுவினருடன் சேர்ந்து பாடினார். இளையராஜாவின் இசைக்கச்சேரியை பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கண்டு களித்தனர்.