புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவி மீது டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள முதுகுளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகள் மீனாசுந்தரி (22), இவர் தஞ்சாவூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார், வழக்கம்போல் இவர் திங்கள்கிழமை காலை இவரது அண்ணன் கனகராஜ் (24,உடன் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிலிருந்து முதுகுளம் சாலையில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தபோது வீரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான சோளம் ஏற்றி வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து மீனாசுந்தரி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். படுகாயமடைந்த அவரது அண்ணன் கனகராஜை மீட்டு அருகிலிருந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணைசெய்து வருகின்றனர்.