இந்தோனேசியா நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவானது. நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது.
இதனால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர். சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்தநிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. நிலநடுக்கத்தால் அங்கு மின்சாரம் தடைபட்டது. ஏராளமான வீடுகள் இருளில் தவித்து வருகின்றனர்.