விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பழிக்குப்பழியாக
இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே உடையனம்பட்டியை சேர்ந்த சபரி மற்றும் குலசேகரநல்லூரை சேர்ந்த ரத்தினவேல்பாண்டியன் இருவரையும் காணவில்லை என திருச்சுழி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்
காவல்துறையினர் அவர்கள் உபயோகித்த செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்ததில்
அருப்புக்கோட்டை புற வழிச்சாலை அருகே பி. தொட்டியாங்குளம் செல்லும் சர்வீஸ் சாலை யின் கிழக்கு பகுதியில் உள்ள முனியப்பசுவாமி கோவில் அருகே காண்பித்துள்ளது.
அங்கு சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்குசபரி மற்றும் ரத்தினவேல் பாண்டியன் இருவரும் சரமாரியாக வெட்டப்பட்டு கொலையுண்டு கிடந்தனர்.
அதன்பின் விசாரனை செய்ததில் பழிக்குபழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
திருச்சுழி அருகே உள்ள உடையனம் பட்டியில் முன்னாள் திமுக மகளிர்தொண்டரணி அணி துணை செயலாளராக இருந்தவர் ராக்கம்மாள் .இவர் தனது அக்காள் மகள் சோலைமணியை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார் .
சோலை மனி நாமக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அவரை அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளார் ராக்கம்மாள்.
ஆனால் திருமணம் முடித்த சில காலங்களிலேயே சோலை மணியம் மூர்த்தியும் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளனர்.இந்த பிரிவிற்கு ராக்கம்மாள் தான் காரணம் என எண்ணிய மூர்த்தி கடந்த 12.03.2022 அன்று வீட்டில் தனியாக இருந்த ராக்கமாளை குத்தி கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில்
மூர்த்தி மற்றும் அவரது அப்பா, அம்மா, தம்பி சபரி, செல்வம் ஆகிய 5 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு
சபரி, செல்வம், மூர்த்தி,ஆகிய 3 பேர்
கைது செய்யப்பட்டனர்.
இதனிடைய
மூர்த்தி, சபரி, செல்வம் ஆகிய 3 பேரும் ஜாமினில் வெளியில் வந்துள்ளனர்.
இந்நிலையில் சபரி மற்றும் செல்வத்தின் சகளை ரத்தினவேல் பாண்டியன் ஆகிய இருவரையும் காணவில்லை என போலீசார் தேடி வந்த நிலையில் இருவரும் அருப்புக்கோட்டை அருகே கொலையுண்டு கிடப்பது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.அதன்பின் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகரன்
திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன் மற்றும் அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர்கள் பாலமுருகன், சோபியா சம்பவ இடத்திற்கு சென்று கொலையுண்ட இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.