விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு அருகிலுள்ள ஓடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளான சாலை விபத்தில் இருவர் பலியாகினர். 3 பேர் காயம் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெத்துரெட்டிபட்டி விலக்கில் சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கார் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு அருகிலுள்ள ஓடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹைவே ரோந்து போலீசார் படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்சில் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சர்க்கரவர்த்தி (57) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் மேலும் ரேக்ளாண்ட் (60) என்பவர் பலத்த காயமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு போகும் வழியில் உயிர் இழந்தார் மேலும் இருவர் சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசாரணையில் சர்க்கரவர்த்தி தனது நண்பர்கள் 3 பேருடன் திருநெல்வேலிக்கு ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்து முடித்த தனது மகன் அபிஷேக்கை காண சென்றதாகவும் வழியில் அதிகாலை தூக்க கலக்கத்தில் கார் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டதாகவும் விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.