நமது அரசியல் சாசனமே மிகப்பெரிய பலம்-உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்று இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும். மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன் மக்களிடம் இணக்கமாக நடப்பதும் ஆளும் அதிகாரத்தின் முக்கிய வேலையாகும். 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசனம் பாராளுமன்றத்தில் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை நினைவில் கொள்ளும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இன்றைய தினம் அரசியல் சாசன தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முன்பு தேசிய சட்ட தினமாக கடை பிடிக்கப்பட்டது என்றார்.
உச்சநீதிமன்ற த்தில் அரசியல் சாசன தின விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மெய் நிகர் நீதி கடிகாரம், கைப்பேசி செயலி 2.0 டிஜிட்டல் நீதிமன்றம், எஸ். 3 வாஸ் இணையதளம் ஆகிய நீதித்துறை தொடர்பான சேவைகளை தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் இந்திய ஜனநாயகத்தின் தாய் என்ற தலைப்பில் அரசியல் சாசன நிகழ்ச்சிகள் நடந்தது. அரசியல் சாசன தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொது மக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நமது அரசியல் சாசனமே மிகப்பெரிய பலமாகும். அரசியல் சாசனம் நமக்கு கொடுத்து இருப்பது மிகப்பெரிய நம்பிக்கையாகும். இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்று இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் நீதி கிடைக்க நமது நீதித்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது.
மக்களின் அடிப்படை கடமைகளை நிறைவேற்றுவது முன்னுரிமையாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன் மக்களிடம் இணக்கமாக நடப்பதும் ஆளும் அதிகாரத்தின் முக்கிய வேலையாகும். இந்தியாவின் வளர்ச்சி வலுவான பொருளாதாரம். சர்வதேச அளவில் நமக்கு நற்பெயர் பெற்று கொடுத்து உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
மராட்டிய மாநிலம் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்போது பரபரப்புடன் பேசப்பட்டது. இந்த நிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதலின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதேபோன்று நாட்டில், அரசியல் சாசன தினமும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன தின கொண்டாட்டங்கள் இன்று நடந்தன. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.