அருப்புக்கோட்டை அருகே தந்தைமீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த மகன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே வதுவார்பட்டியில் தனியாக வசித்து வருபவர் பெருமாள் மகன் பாக்கியராஜ்(63).இவரது மகனான குருமூர்த்தி(35) என்பவர் வாழ்வாங்கி கிராமத்தில்தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார்.இதனிடைய சொந்தமாகப் புதிதாக ஒரு டிராக்டர் வாங்கிய பாக்கியராஜ்,அதைத் தனது மகன் குருமூர்த்தியின் பராமரிப்பில் விட்டு வாடகைக்கு விடுமாறு பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.ஆனால் குருமூர்த்தி அந்த டிராக்டரை வாடகைக்கு விட்ட பணத்தை தானே வைத்துக்கொண்டு வீண்செலவு செய்து வந்தாராம்.இதனால் குருமூர்த்தி மீது அதிருப்தியடைந்த பாக்கியராஜ்,,கடந்த வெள்ளிக்கிழமை இரவு அலைபேசியில் தொடர்பு கொண்டு மகனது தவறைத் தட்டிக்கேட்டாராம்.
இதனால் ஆத்திரமடைந்த குருமூர்த்தி சிறுதி நேரத்தில் தந்தை வீட்டிற்கு வந்தபோது,அவர் வீட்டுக் கதவை உள்முகமாகத் தாழிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாராம்.அப்போது குருமூர்த்தி கதவைத்தட்டியும்,தந்தையாகிய பாக்கியராஜ் கதவைத் திறக்காததால்,மேலும் ஆத்திரமடைந்த குருமூர்த்தி தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை அவ்வீட்டுக் கதவின் கீழ் இடைவெளி வழியாக ஊற்றித் தீவைத்துத் தப்பியோடிவிட்டாராம்.இதில் பாக்கியராஜின் மீது தீப்பற்றிக்கொள்ள, மிகவும் சிரமப்பட்டு உடலில் பரவிய தீயை அவர் தானாகவே அனைத்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் இதுதொடர்பாக போலீசில் பாக்கியராஜ் புகார் கொடுத்தாராம்.இதன்பேரில் சனிக்கிழமை இரவு பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்து,குருமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர்.