
குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் துவங்கியது.11 மணி நிலவரப்படி 24.92 சதவீத வாக்குகள் பதிவானது
குஜராத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் கட்ட தேர்தல் நடந்து வருகிறது. 89 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆமதாபாத், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.காலை எட்டு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை ஐந்து மணி வரை நடைபெறுகிறது.குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில் குஜராத் மக்கள் வேலை வாய்ப்புக்காக வாக்களிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: வேலை வாய்ப்பு, மலிவு விலை சிலிண்டர், கடன் தள்ளுபடி ஆகியற்றிக்காக குஜராத் மக்கள் வாக்களிக்க வேண்டும். மக்கள் இந்த பெருமளவு வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் இன்று 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அகமதாபாத்தில் பிரதமர் மோடி இன்று மாலை பேரணியாக செல்கிறார். மாலை தொடங்கும் இந்த பயணம் இரவு 9.45 மணியளவில் நிறைவு பெறுகிறது. இதில் 50 கி.மீ தொலைவு வரை பிரதமர் சாலை மார்கமாகவே பயணிக்கிறார்.
குஜராத் சட்டமன்ற முதல் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. முக்கிய பிரமுகர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். அந்த வகையில், குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ராஜ்கோட்டில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
குஜராத்தில் முதல் கட்டமாக இன்று 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில், வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், அதிக வாக்காளர்கள் இந்த தேர்தலில் பங்கேற்று புதிய சாதனை நிகழ்த்த வேண்டும். முதல் தடவையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செயல்படுத்த வேண்டும்’ என்றார்.
குஜராத்தில் இன்று நடைபெற்று வரும் தேர்தலில் இரண்டு கோடி வாக்காளர்கள், 89 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க உள்ளனர். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.