February 15, 2025, 3:19 PM
31.6 C
Chennai

குஜராத் தேர்தல்: அகமதாபாத் வாக்குச்சாவடியில்வாக்களித்த பிரதமர் மோடி ..

குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில் உள்ள வாக்குச்சாடியில் வாக்களித்தார். அவரது வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முன்னதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று குஜராத் இரண்டாம் கட்ட தேர்தலில் மக்கள் குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் திரளாக வந்து வாக்களிக்க வேண்டுகிறேன். நான் காலை 9 மணிக்கு நான் வாக்களிக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். அதன்படி இன்று காலை 9.25 மணியளவில் அவர் தனது வாக்கினை பதிவை செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து சிறிது தூரம் மக்களுக்கு கையசைத்தபடி நடந்து சென்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, “ஜனநாயகத் திருவிழாவை குஜராத், இமாச்சலப் பிரதேசம் மற்றும் டெல்லி மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையம் தேர்தலை அமைதியாக நடத்தி வருகிறது. அதற்கும் வாழ்த்துகள்” என்றார்.

முன்னதாக பிரதமர் நேற்று தனது சொந்த ஊரில் தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி, குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் தக்கோர், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ஆகியோர் வாக்களிக்கின்றனர்.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இன்றைய தேர்தலில் 833 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 2.51 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். 26,409 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 36,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் நடைபெறும் 14 மாவட்டங்களில் 84 ஆயிரம் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் தேர்தல் நடைபெறுகிறது.

குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பாரதி கூறுகையில், “மொத்தமுள்ள 26,409 வாக்குச்சாவடிகளில் 93 வாக்குச்சாவடிகள் மாடல் சாவடிகள், 93 சூழல் நட்பு வாக்குச்சாவடிகள், 93 சாவடிகள் மாற்றுத் திறனாளிகளால் இயக்கப்படுகிறது இவைதவிர 14 வாக்குச்சாவடிகள் இளைஞர்கள் வசம் உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் 13,319 வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு வெப்காஸ்ட் செய்யப்படுகிறது. மொத்தம் 2,51,58,730 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். இவர்களில் 1,29,26,501 பேர் பெண்கள். 1,22,31,335 பேர் ஆண்கள். 894 பேர் மூன்றாம் பாலினத்தவராவர்” என்றார்.

இன்று அகமதாபாத், காந்திநகர், மேஷானா, பதான், பானாஸ்கந்தா, சபர்கந்தா, ஆரவல்லி, மஹீஸ்நகர், பஞ்சமஹால், தாஹோத், ஆனந்த், கேதா, சோட்டா உதய்பூர் போன்ற மாவட்டங்கள் தேர்தலை சந்திக்கின்றன.

குஜராத் தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சி விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டது. பஞ்சாப்பை போல் குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், “புதிய நம்பிக்கைகளுக்கான தேர்தல் இது. பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு குஜராத் வளர்ச்சிக்காக வாக்களியுங்கள். இந்த முறை சற்று வித்தியாசமாக, அற்புதமானதை செய்யுங்கள்” என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

சென்னைக்கு முதல் ஏசி புறநகர் ரயில்! டிக்கெட் விலை ‘அம்மாடியோவ்’!

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ஐசிஎஃப்-பில் முதல் ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி நிறைவு

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

Entertainment News

Popular Categories