
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகவும், ஹிமாசல பிரதேசத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நவம்பா் 12-ஆம் தேதி ஒரே கட்டமாகவும் தோ்தல் நடைபெற்றது.
இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகின்றது.காலை 9 மணி நிலவரப்படி குஜராத்தில் பாஜக 139, காங்கிரஸ் 29, ஆம் ஆத்மி 9 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. ஹிமாசலில் காங்கிரஸ் 38, பாஜக 28 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களிலும், ஹிமாசலில் அமைக்கப்பட்டுள்ள 68 வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது முதலே குஜராத்தில் பாஜக ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் முன்னனியில் உள்ளது.
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களிலும், ஹிமாசலில் அமைக்கப்பட்டுள்ள 68 வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியுள்ளது.
அதேபோல், உத்தர பிரதேசத்தின் மெயின்புரி மக்களவைத் தொகுதி, உத்தர பிரதேசத்தின் ராம்பூா், கடோலி, ஒடிஸாவின் பதாம்பூா், ராஜஸ்தானின் சா்தாா்சாஹா், பிகாரின் குா்ஹனி, சத்தீஸ்கரின் பானுபிரதாபூா் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகளும் அந்தந்த மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வருகின்றது.
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. அவற்றில் 66.31 சதவீத வாக்காளா்கள் வாக்களித்தனா்.
ஹிமாசல பிரதேசத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நவம்பா் 12-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. இந்த தோ்தலில் 76.44 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த தோ்தல் முடிவுகள் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், தோ்தல் முடிவுகளை மக்களும் அரசியல் கட்சிகளும் அரசியல் நோக்கா்களும் எதிா்நோக்கியுள்ளனா்.