
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்காக நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8 – 9ஆம் தேதிகளில் வட தமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்று கணிக்கப்பட்டிருந்தத
புயல் சின்னத்துக்கு மாண்டஸ் என்று பெயரிடப்படும். இது டிசம்பர் 9ஆம் தேதி இரவு புதுச்சேரிக்கும் – ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆந்திரம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் புயல் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் நெல்லூர், திருப்பதி, பிரகாசம் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, திருப்பதியில் கனமழை காரணமாக கட்டமைப்புகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி, சாலைகள் உள்ளிட்டவை சேதமடைந்த காரணத்தால், இந்த முறை திருப்பதி கோயிலில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.