― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாதேசத்தின் நன்மைக்காக பணியாற்றுவோர் குற்றவுணர்வோடு வாழ வேண்டிய தேவையில்லை: மோதீ

தேசத்தின் நன்மைக்காக பணியாற்றுவோர் குற்றவுணர்வோடு வாழ வேண்டிய தேவையில்லை: மோதீ

- Advertisement -

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
(ஆல் இண்டிய ரேடியோ, சென்னை)

PM Modi’s Address | Vigilance Awareness Week of CVC at Vigyan Bhawan, New Delhi

இந்த லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம், சர்தார் ஐயாவின் பிறந்த நாளிலிருந்து, தொடங்கப்பட்டிருக்கிறது.  சர்தார் ஐயாவுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும், நேர்மை ஒளிவுமறைவற்ற தன்மை, மேலும் இதனால் உத்வேகம் பெற்ற மக்கள் சேவையில் ஈடுபட, அர்ப்பணிக்கப்பட்டது.  இதே அர்ப்பணிப்பு உணர்வுடனே கூட, அவர்கள், விழிப்போடு இருத்தல் மீதான, விழிப்புணர்வினை செயல்படுத்தினார்.  இந்த முறை, நீங்கள் அனைவரும், வளர்ச்சியடைந்த பாரதத்திற்காக, லஞ்சலாவண்யம் இல்லாத பாரதம், என்ற உறுதிப்பாட்டிற்காக, லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள்.  இந்த உறுதிப்பாடு, இன்றைய காலகட்டத்தின் தேவை அவசியமானதும் கூட.  அதே போல நாட்டுமக்களுக்கும் மிக மகத்துவம் வாய்ந்ததும் கூட. 

நண்பர்களே வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு, நம்பிக்கை, மேலும் நம்பகத்தன்மை, இவை இரண்டும் மிகவும் அவசியமானவை.  அரசாங்க அமைப்புகளின் மீது மக்களின் அதிகரிக்கும் நம்பிக்கை, மக்களின் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது.  நம் நாட்டிலே இருந்த மேலும் ஒரு சங்கடம் என்றால், அரசாங்கங்கள் மக்களின் நம்பிக்கையை ஒரு புறம் இழந்தன, மறுபுறம் மக்களின் மீது நம்பிக்கை வைப்பதையும் இழந்தன. 

பலகாலத்திய அடிமைத்தனம் நம்மை, ஊழல் பற்றிய அடக்குமுறை பற்றிய, ஆதாரங்கள் மீதான அரசு கட்டுப்பாடு தொடர்பான, நிலவிய மரபு, துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகு, மேலும் விரிவடைந்தது.  இதனால் பெரிய இழப்பினை, தேசத்தின், நான்கு தலைமுறைகள் சந்தித்தன.  ஆனால் சுதந்திரத்தின் அமுதக்காலத்திலே, நாம், தசாப்தங்களாகத் தொடர்ந்துவரும் இந்த வழிமுறையை, முழுமையாக மாற்றியமைக்க வேண்டும். 

இந்த முறை, 15 ஆகஸ்ட் அன்று, செங்கோட்டையிலிருந்து நான் கூறியிருந்தேன், கடந்த 8 ஆண்டுகளின் முயற்சிகள் செயல்பாடுகள், சில முன்னெடுப்புக்கள், இவற்றுக்குப் பிறகு, இப்போது, லஞ்சத்துக்கு எதிராக, தீர்மானமான போருக்கான வேளை வந்து விட்டது.   இந்தச் செய்தியைப் புரிந்து கொண்டு, இந்தப் பாதையில் பயணித்து, நம்மால் வளர்ந்த பாரதத்தை நோக்கி விரைவாக முன்னேற முடியும். 

நண்பர்களே நம்முடைய நாட்டிலே ஊழல் மறையாமல் நமது நாட்டுமக்களை, முன்னேற விடாமல் தடைப்படுத்துபவை, இரண்டு பெரிய காரணங்கள்.  ஒன்று, வசதிகளின் குறைவு, மேலும் இரண்டாவது, அரசாங்கத்தின் அவசியமில்லாத அழுத்தம்.  நீண்டகாலமாகவே நமது நாட்டிலே, வசதிகளின் பற்றாக்குறை என்பது, நிலைநிறுத்தப்பட்டு வந்தது.  இந்த இடைவெளி இந்த சமமற்ற நிலை, தொடர விடப்பட்டது.  இதன் காரணமாக ஒரு ஆரோக்கியமற்ற….. போட்டி, தொடங்கப்பட்டது இதிலே, எந்த ஒரு ஆதாயமும், எந்த ஒரு வசதியும், மற்றவர்களுக்கு முன்பாக அடைய மோதல் ஏற்பட்டது. 

இந்த மோதல் தான், லஞ்சம் நிறைந்த ஒரு சூழலினை உருவாக்குவதிலே, ஒருவகையிலே உரமும் நீருமாய் செயல்பட்டன.  ரேஷன் கடைகளிலே வரிசை, எரிவாயு இணைப்புப் பெறுதல் முதல் எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதல் வரை வரிசை.  பில் கட்ட வேண்டுமா அட்மிஷன் வேண்டுமா உரிமம் வேண்டுமா, ஏதாவது அனுமதி வேண்டுமா அனைத்து இடங்களிலும் கியூவரிசை

இந்த வரிசை எத்தனை நீளமானதோ, லஞ்சத்தின் வேர்கள் அந்த அளவுக்கு ஆழமாகச் செல்லுபவை.   இது போன்ற ஊழலமைப்பின் மிகப்பெரிய இழப்பினை, ஒருவர் ஏற்கிறார் என்றால், அவர் தான், தேசத்தின் ஏழை, மேலும் தேசத்தின் மத்திய வகுப்பினர்.   தேசத்தின் ஏழைகளும் மத்திய வகுப்பினரும், தங்களுடைய சக்தியை, இதே ஆதாரங்களைப் பெறுவதிலேயே செலவு செய்யும் போது, இந்த தேசத்தால் எப்படி முன்னேற முடியும்?  எப்படி வளர்ந்த நாடாகும்?  ஆகையாலே, கடந்த எட்டு ஆண்டுகளாக, பற்றாக்குறை அழுத்தம் இருக்கும் அமைப்பை மாற்றும் முயற்சியிலே ஈடுபட்டு வருகிறோம்.   தேவை மற்றும் வழங்கலுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப முயன்று வருகிறோம். 

இதன் பொருட்டு, நாங்கள் பல வழிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.  மூன்று முக்கியமான விஷயங்கள் மீது உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.  ஒன்று, நவீன தொழில்நுட்பம் காட்டும் பாதை.  இரண்டாவது, அடிப்படை வசதிகளின் செரிவான நிலை என்ற இலக்கு.  மேலும் மூன்றாவதாக, தற்சார்பு பாரதம் என்ற பாதை.  இப்போது ரேஷன் முறையையே எடுத்துக் கொள்ளுங்கள்!  கடந்த எட்டு ஆண்டுகளிலே நாம் பொது விநியோகமுறையை தொழில்நுட்பத்தோடு இணைத்தோம்.  இதனால் கோடிக்கணக்கான போலிப் பயனர்களை, அமைப்புமுறையிலிருந்து வெளியேற்றினோம்.  இதைப் போலவே….. டிபிடி மூலம் அரசாங்கம் வாயிலாக…… அளிக்கப்பட்டுவரும் ஆதாயம் நேரடியாக, பயனாளிகளிடம் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது.  

இந்த ஒரு முயல்வினால் மட்டும், இதுவரை இரண்டு இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை, தவறானவர்கள் கைகளுக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.  இரண்டு இலட்சம் கோடி ரூபாய்!!!  ரொக்கத்தை ஆதாரமாகக் கொண்ட பொருளாதாரத்திலே, லஞ்சலாவண்யம், கருப்புப்பணம், இவற்றை அடையாளம் காண்பது எத்தனை கடினமானது, என்பதை நாமனைவரும் அறிவோம்.  இப்போது டிஜிட்டல் முறையிலே பரிவர்த்தனையிலே முழுவிவரமும், மிக சுலபமாக நமக்குக் கிடைத்து விடும்.  கவர்மெண்ட் ஈ மார்க்கெட் ப்ளேஸ், ஜெம் போன்ற அமைப்புமுறை, அரசாங்கக் கொள்முதலில் எத்தனை ஒளிவுமறைவற்ற தன்மை ஏற்பட்டிருக்கிறது, இதோடு இணைந்திருப்பவர்களுக்கு இதன் அருமை புரிந்திருக்கிறது, அவர்கள் உணர்கிறார்கள். 

நண்பர்களே எந்த ஒரு அரசுநலத்திட்டத்தின், அனைத்து ஆதாயங்களும் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும்.  செரிவான நிலை என்ற இலக்கை அடைவது, சமூகத்திலே, ஏற்றத்தாழ்விற்கும் முடிவு கட்டுகிறது, லஞ்சலாவண்யத்திற்கான சாத்தியக்கூறுகளுக்கும் முடிவு கட்டுகிறது.  அரசாங்கமும் அரசாங்கத்தின் பல்வேறு துறைகளும், தாங்களே முன்வந்து உரித்தான பயனாளிகளை அடையாளம் காணும் போது, அவர்கள் வாயிற்கதவுகளைத் தட்டும் போது, அப்போது இந்த இடைத்தரகர்கள், வழியிலே குறுக்கிட மாட்டார்கள், அவர்களுக்கு வேலையே இல்லாமல் போய் விடும்.  ஆகையினாலே, நம்முடைய அரசாங்கம் முன்வைக்கும், அனைத்துத் திட்டங்களும் செரிவுநிலை என்ற இலக்கை நோக்கியே உள்ளன.  அனைத்து வீடுகளுக்கும் குடிநீர், ஏழைகள் அனைவருக்கும் நல்லதொரு குடியிருப்பு, அனைத்து ஏழைகளுக்கும் மின்னிணைப்பு, அனைத்து ஏழைகளுக்கும் எரிவாயு இணைப்பு, இந்தத் திட்டங்கள் அனைத்தும், இந்த அணுகுமுறையையே எடுத்துக் காட்டுகின்றன.

நண்பர்களே அயல்நாடுகளின் மீது அளவுக்கதிகமாக சார்ந்திருப்பது கூட, லஞ்சலாவண்யத்திற்கான காரணமாக அமைகிறது.  நீங்களே அறிவீர்கள், எப்படி எல்லாம், பல தசாப்தங்களாகவே, நம்முடைய பாதுகாப்புத்துறையைச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பது.  இதன் காரணமாக ஏகப்பட்ட மோசடிகள் நடந்திருக்கின்றன.  இன்று நமது பாதுகாப்புத் துறையிலே, தற்சார்பின் மீது நாம் பெரும் அழுத்தம் அளித்து வருகிறோம்.  இதன் காரணமாக, மோசடிகளுக்கான சாத்தியக்கூறுகளும் வற்றிப்போய் விட்டன. 

ரைபிள்கள் தொடங்கி போர்விமானங்கள், மேலும் போக்குவரத்து விமானங்கள் வரை, இன்று பாரதம், தானே தயாரிக்கும் திசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.  பாதுகாப்புத் துறை மட்டுமல்ல, மற்ற பிற தேவைகளுக்காகக்கூட நாம், அயல்நாடுகளிடமிருந்து வாங்குவதை, குறைந்த அளவாக இருக்க வேண்டும் என்ற, தற்சார்பு பாரதம் நோக்கிய முயற்சிகளுக்கு, இன்று ஊக்கமளிக்கப்பட்டு வருகின்றது. 

நண்பர்களே, சிவிசி, ஒளிவுமறைவற்றதன்மையை உறுதி செய்ய ஏற்படுத்தப்பட்டது.  அனைவரின் முயற்சிகளுக்கும், ஊக்கமளிக்கக்கூடிய ஒரு அமைப்பு இது.  கடந்த முறை நான் உங்கள் அனைவரிடமும், காப்பு கண்காணிப்பு மீது கவனம் செலுத்த வேண்டுகோள் விடுத்திருந்தேன்.  நீங்கள் இந்த திசையிலே, பல முனைவுகளை மேற்கொண்டுள்ளீர்கள் என்று எனக்குக் கூறப்பட்டிருக்கிறது.  இதற்காக, மூன்றுமாதக்கால இயக்கம் நடத்தப்பட்டிருக்கிறது. 

இது மிகவும் பாராட்டுக்குரியது…… இதற்காக நான் உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இதற்காக, ஆடிட் ஆகட்டும் இன்ஸ்பெக்ஷன் ஆகட்டும், நீங்கள் ஒரு பாரம்பரியமான வழிமுறையைக், கையாண்டு வருகிறீர்கள்.  ஆனால் இதையே நீங்கள் அதிக நூதனமாக அதிகம் தொழில்நுட்பம் சார்ந்ததாக ஆக்கினால், இது தொடர்பாகவும் நீங்கள், கண்டிப்பாகச் சிந்தியுங்கள் அதிகம் சிந்திக்கவும் வேண்டும். 

நண்பர்களே ஊழலுக்கு எதிராக, அரசாங்கம் வெளிப்படுத்துகின்ற உறுதியை, இதே அளவு உறுதி, அனைத்துத் துறைகளிலும் புலப்படுமாறு வெளிப்படுத்தப்பட வேண்டும்.  வளர்ந்த நாடாக வேண்டுமென்றால், எப்படிப்பட்ட ஒரு நிர்வாக சூழலமைப்பை உருவாக்க வேண்டுமென்றால், அது ஊழலுக்கு எதிராக, பூஜ்யம் சகிப்புத்தன்மை உடையதாக இருக்க வேண்டும்.  இது இன்று அரசின் கொள்கைகளிலே அரசாங்கத்தின் உறுதிப்பாடாக இருக்கிறது.  அரசாங்கத்தின் முடிவுகளிலே இருக்கிறது.  இதை நீங்கள் ஒவ்வொரு படியிலும் பார்க்க முடியும்.  ஆனால் இதே உணர்வு, நம்முடைய அரசாங்க நிர்வாக அமைப்புகளின் மரபணுக்களிலும் பலமாக கலந்து உறைய வேண்டும். 

ஒரு கருத்து என்னவென்றால், ஊழல் அதிகாரிகள் இருக்கிறார்களே, அவர்களுக்கு எதிரான நடவடிக்கை, அது அபராதம் சார்ந்ததாகவோ, துறை சார் நடவடிக்கையோ, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கிறது.  நாம் ஊழல் தொடர்பான, ஒழுங்குமுறை நடவடிக்கைகளை, இலக்கு நிர்ணயித்து, குறித்த கால அளவைத் தீர்மானித்து முடிவுக்குக் கொண்டுவர முடியுமா?  ஏனென்றால் தலைமீது தொங்கும் கத்தி, அவருக்குமே பெரும் உளைச்சலாக இருக்கும். 

அவர் ஒருவேளை குற்றமற்றவர் என்றால், இந்தச் சுழலில் சிக்கி விட்டால், அவருடைய மனோநிலை எப்படி என்றால் நான் நேர்மையாக வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேனே, என்னை இப்படிச் சிக்க வைத்து விடுவிப்பும் அளிக்காமல் இருக்கிறார்களே!!  யார் தவறு இழைத்தார்களோ அவர்கள் படும் துன்பம் வேறு ஆனால் யார் செய்யவில்லையோ, தொங்கும் இந்தக் கத்தி காரணமாக தனக்கும் சரி அரசுக்கும் சரி ஒரு சுமையாக மாறிப் போவார்.  உங்களுடைய சக ஊழியர்களையே கூட இத்தனை நீண்ட காலமாக இழுபறியில் வைத்திருப்பதால் என்ன பயன்?  நண்பர்களே இது போன்ற விஷயங்களில், எத்தனை விரைவாக முடிவு எடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு நிர்வாக அமைப்பினிலே ஒளிவுமறைவற்ற தன்மை ஏற்படும், அதன் சக்தி அதிகரிக்கும். 

குற்றவியல் வழக்குகளிலேயும் கூட, விரைந்து நடவடிக்கை எடுத்து அவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருவதும் மிக அவசியம்.  மேலும் ஒரு விஷயத்தைச் செய்ய முடியுமென்றால், அது தான், நிலுவையில் இருக்கும் ஊழல் வழக்குகளின் அடிப்படையில், துறைகளின் படிநிலை.  எப்படி நாம் தூய்மை தொடர்பாக போட்டிகள் நடத்தினோமோ அதே போல இந்த விஷயத்திலும் கூட படிநிலைகளை ஏற்படுத்தலாமே!!  பார்க்கலாமே, எந்தத் துறை இதில் உதாசீனமாக இருக்கிறது…. என்ன காரணம்??   அதே போல எந்தத் துறை, இந்த விஷயத்தைத் தீவிரமாகக் கருதி முன்னெடுத்துச் செல்கிறது என்று பார்க்கலாமே!!  இதோடு தொடர்புடைய அறிக்கைகளின்…. மாதாந்திர அல்லது மூன்று மாதத்திற்கொரு முறை வெளியீடு.  பல்வேறு துறைகளின் ஊழலுக்கு எதிராக நடந்துவரும் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர, உத்வேகம் அளிக்கும்.   

நாம் தொழில்நுட்பம் வாயிலாக, மேலும் ஒரு விஷயத்தையும் செய்ய வேண்டும்.  நாம் பலமுறை பார்த்திருக்கிறோம், அதாவது கண்காணிப்புத் தடைநீக்கலில், நிறைய காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.  இந்தச் செயல்பாட்டையும் கூட தொழில்நுட்பத்தின் உதவியோடு நெறிப்படுத வேண்டும்.  மேலும் ஒரு விஷயத்தை நான், உங்கள் முன்பாக வைக்க விரும்புகிறேன் அது என்னவென்றால், அது பொதுமக்கள் குறைகள் தரவுகள் பற்றியது.  அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிலே, சாமான்ய மக்களால் அனுப்பப்படும் முறையீடுகள், இவற்றைத் தீர்க்கவும் ஒரு வழிமுறை அமைக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் பொதுமக்கள் புகார்களின் தரவுகளை நாம் கணக்கெடுத்தோம் என்றால், அப்போது தெரிய வரும், ஏதோ ஒரு குறிப்பிட்ட துறைக்குத் தான், அதிக அளவிலான முறையீடுகள் வருகின்றன.   ஏதோ ஒரு குறிப்பிட்ட நபரிடம், அனைத்துப் புகார்களும் சென்று தேங்குகின்றன.   நம்முடைய வகைப்படுத்தல் வழிமுறையிலே, எங்கோ ஏதோ சிக்கல் இதை நம்மால் சரிசெய்ய முடியாதா?  இப்படி நீங்கள் செய்வதன் மூலமாக அந்தத் துறையிலே, ஊழலின் அடிவேர் வரை எளிதாக சென்றடைய முடியும். 

நாம் இந்தப் புகார்களை….. தனியானவையாகப் பார்க்கக் கூடாது.  இவற்றை முழுமையாக கண்டுணர்ந்து தீர்க்கமாக அலசிப் பார்க்க வேண்டும்.  இதனாலே, அரசு நிர்வாகம் மற்றும் அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும். 

நண்பர்களே, ஊழல் மீதான கண்காணிப்பிலே, நாம் சமுதாயத்தின் பங்களிப்பினை, சாமான்ய மக்களின் பங்களிப்பினை, நாம் எத்தனை அதிகமாக ஊக்கப்படுத்த முடியுமோ, இது தொடர்பாகவும் பணியாற்ற வேண்டும்.   அந்த வகையிலே, ஊழல்வாதி எத்தனை தான் பலம் பொருந்தியவராக இருந்தாலும், அவர் எந்த ஒரு நிலையிலும், தப்பித்து விடக் கூடாது.  இது உங்களைப் போன்ற அமைப்புகளின் பொறுப்பாகும்.  எந்த ஒரு ஊழல்வாதிக்கும், அரசியல்ரீதியான சமூகரீதியான அடைக்கலம் கிடைக்கக்கூடாது, ஒவ்வொரு ஊழல்வாதியும் சமூகம் வாயிலாக, தண்டனை கிடைத்தாக வேண்டும்.   

இந்தச் சூழ்நிலை ஏற்படுத்தப்படுவதும் மிகவும் அவசியம்.  நாம் பார்த்திருக்கிறோம், சிறைத் தண்டனை அடைந்த பிறகும் கூட, ஊழல் நிரூபிக்கப்பட்டதன் பிறகும் கூட, பல வேளைகளில், ஊழல்வாதிகளுக்குப் பாமாலை சூட்டப்படுகிறது.  நேர்மைக்காகக் கொடிபிடிக்கும் பேர்வழிகள் ஊழல்வாதிகளின், கைகளை உயர்த்தி வெட்கமில்லாமல் புகைப்படம் எடுப்போரை நான் பார்த்திருக்கிறேன்.  இந்த நிலைமை, பாரத சமுதாயத்திற்கு நல்லதே அல்ல.  இன்றும் கூட சில பேர், குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, வகைவகையான தர்க்கங்களை முன்வைக்கிறார்கள். 

இப்போதெல்லாம் ஊழல்வாதிகளுக்கு பெரிய கௌரவங்களை அளிக்க, ஆதரவு அளிக்கப்படுகிறது.  நான் இந்த நாட்டிலே இதுவரை இப்படி கேள்விப்பட்டதே இல்லை.   இப்படிப்பட்ட நபர்கள் இந்த சக்திகளுக்கும் கூட, சமூகம் வாயிலாக அவர்களின் கடமைகளைப் புரியவைப்பது மிக அவசியமாகிறது.   இதிலும்கூட, உங்கள் துறைகள் வாயிலாகச் செய்திருக்கும் சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பெரும் பங்களிப்பு உள்ளது. 

நண்பர்களே, இன்று நான் உங்களிடையே வந்திருக்கும் வேளையில், மேலும் சில விஷயங்களையும் முன்வைக்க மனம் விரும்புகிறது.  லஞ்சலாவண்யம் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராகச் நடவடிக்கை எடுக்கின்ற, சிவிசி போன்ற அனைத்து அமைப்புக்கள், இங்கே இந்த அனைத்துச் செயல்களைச் சேர்ந்தோர் அமர்ந்திருக்கின்றார்கள்.  நீங்கள் டிஃபென்ஸிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை.  கரவொலி

தேசத்தின் நன்மைக்காக பணியாற்றுவோர் குற்றவுணர்வோடு வாழ வேண்டிய தேவையில்லை நண்பர்களே.   நாம் அரசியல் செயல்திட்டத்தோடு செயல்பட வேண்டியதில்லை.  ஆனால் தேசத்தின் சாமான்யர்களுக்கு ஏற்படும் சி்ரமங்களிலிருந்து, விடுதலை அளிக்க வேண்டியது நமது கடமையாகும்.  இந்தப் பணியை நாம் செய்தே ஆக வேண்டும்

யாருக்கு சுயநல அக்கறை இருப்பவர்கள் கத்துவார்கள்.  அவர்கள் அமைப்புகளின் கழுத்தை நெரிக்க முயல்வார்கள்.  இந்த அமைப்புகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றுவோர் மீது அவதூறு பரப்ப முயல்வார்கள்.  இவையனைத்தும் நடக்கும்.  நான் நீண்டகாலமாக இந்த நெருப்பைக் கடந்து வந்திருக்கிறேன் நண்பர்களே.  நீண்டகாலத்திற்கு, அரசாங்கத்தின் தலைவனாக இருக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது.  நான் பல வசவுகளை சகித்திருக்கிறேன் பல குற்றச்சாட்டுக்களைத் தாங்கியிருக்கிறேன் நண்பர்களே.  எனக்கு எதையும் விட்டு வைக்கவில்லை.  ஆனால் மக்கள் தாம் இறைவனின் வடிவமாக இருக்கின்றார்கள்.   கரவொலி.  அவர்கள் சத்தியத்தை உரைத்துப் பார்ப்பவர்கள் சத்தியத்தை அறிந்தவர்கள், சந்தர்ப்பம் வரும் பொழுது சத்தியத்திற்குத் துணையாக நிற்பவர்கள்.  நான் என்னுடைய அனுபவத்திலிருந்து பேசுகிறேன் நண்பர்களே.  நாணயமான வழிமுறையில் பீடுநடை போடுங்கள். 

உங்களுடைய கடமைப் பாதையில் நெஞ்சிலே நேர்மையோடு நேர்கொண்ட பார்வையோடு பயணியுங்கள்.  பாருங்கள், இறைவன் உங்களுக்குத் துணைவருவான் மக்கள் உங்களுக்குத் துணைநிற்பார்கள், சிலர் கத்திக் கொண்டு தான் இருப்பார்கள், ஏனென்றால் அவர்களின் சுயநலம் பாதிக்கப்படுகிறது.  அவர்கள் கால்கள் சாக்கடையில் மாசுபட்டிருக்கின்றன.  ஆகையினால் தான், நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன், தேசத்திற்காக நேர்மைக்காக, பணியாற்றுன் வேளையிலே இப்படிப்பட்ட விவாதங்கள் ஏதும் நடந்தால், நாம் நேர்மைப்பாதையிலே பயணித்தால், சத்தியமான வழியிலே பயணித்தால், தற்காப்பாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை நண்பர்களே.  நீங்கள் அனைவரும் நண்பர்களே, திடநம்பிக்கையோடு செயலாற்றும் போது, பல சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கலாம். 

சமுதாயம் அப்போது உங்களுக்குத் துணையாக இருந்திருக்கும்.  லஞ்சலாவண்யம் இல்லாத தேசம், மேலும் லஞ்சலாவண்யம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க, சிவிசி போன்ற அமைப்புகள், தொடர்ந்து விழிப்போடு இருப்பது, இது ஒரு விஷயம்.  ஆனால் இவர்கள், மற்ற அமைப்புக்களையும் விழிப்போடு இருக்க வைக்கவும் வேண்டும்.  ஏனென்றால் தனியாக இருந்து என்ன செய்ய முடியும், அலுவலகத்தில் அமர்ந்து என்ன செய்ய முடியும்?  அமைப்புமுறை முழுவதும் அவர்களோடு இணையாத வரையில், இந்த உணர்வைத் தங்களுக்குள் இருத்தி செயல்படாத வரையில், அமைப்புகளுமே கூட சில வேளைகளில், கலகலத்துப் போகின்றன. 

நண்பர்களே, உங்களுடைய பொறுப்பு மிகப் பெரியது.  உங்களுடைய சவால்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன, ஆகையினாலே, உங்களுடைய வழிமுறைகளிலும் செயலாற்றும் முறைகளிலும் கூட, தொடர்ந்து இயக்கம் மாற்றியமைக்கும் செயல்திறன் அவசியம்.  எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நீங்கள், இந்த அமுதகாலத்திலே, ஒரு ஒளிவுமறைவற்ற போட்டித்தன்மை நிறைந்த சூழலமைப்பை அமைப்பதிலே, முக்கியப் பங்காற்றி வருவீர்கள். 

இங்கே சில பள்ளிக் குழந்தைகளை, அழைத்திருப்பது எனக்கு பிடித்திருக்கிறது.  அனைவரும் போட்டியிலே பங்கெடுத்தவர்கள், தொடர்ந்து நடைபெறக்கூடிய ஒரு வினாவிடைப் போட்டியையும் முன்னெடுக்கலாம்.  ஆனால் ஒரு விஷயத்தின் மீது என் கவனம் சென்றது உங்களுடைய கவனமும் அதன்பால் சென்றிருக்கலாம்.  நீங்களும் அதைப் பார்த்திருக்கலாம், பலர் அதை கவனித்திருக்கலாம்.  அதை கவனித்த பலர் அது குறித்து சிந்தித்தும் இருக்கலாம்.  நானும் கவனித்தேன் நானும் சிந்தித்தேன்.  வெறும் 20 சதவீத ஆண்கள் மட்டுமே, லஞ்சலாவண்யத்திற்கு எதிரான போராட்டத்திற்கான பரிசுகளை வாங்கியிருக்கின்றார்கள், 80 சதவீதம் பெண்கள் தட்டிச் சென்றிருக்கிறார்கள்.  கரவொலி + மோதிஜியின் சிரிப்பு

ஐந்து நபர்களிலே, சிரிப்புடன் கலந்து நான்கு பெண்கள்.  அதாவது இந்த இருபதை எப்படி எண்பதாக்குவது?  போக்கு அவர்கள் தரப்பில் தான் இருக்கிறது.  இந்தப் பெண்களின் உள்ளங்களிலே இருக்கும் ஊழலை எதிர்க்கும் இதே சக்தி, ஆண்கள் மனதிலும் ஏற்பட்டு விட்டதென்றால், ஒளிமயமான எதிர்காலத்திற்கான பாதை அதுவே ஆகும்.  கரவொலி

ஆனால் நீங்கள் செயல்படுத்தும் இந்தத் தடுப்புச்செயல் இயக்கம் சிறப்பானது.  அதாவது குழந்தைகளின் மனதிலே லஞ்சலாவண்யத்திற்கு எதிரான…. ஒரு வெறுப்பு பிறப்பெடுக்க வேண்டும்.  மாசுக்கு எதிராக வெறுப்பு ஏற்படாத வரையில் தூய்மையின் மகத்துவம் பற்றித் தெரிய வராது.    லஞ்சலாவண்யத்தைக் குறைவாக எண்ணாதீர்கள் அது ஒட்டுமொத்த அமைப்பையும் அரித்து விடும் மொத்தத்தையும் உளுக்கச் செய்து விடும்.  எனக்குத் தெரியும் இதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேச வேண்டும் மீண்டும்மீண்டும் கேட்க வேண்டும் மீண்டும்மீண்டும் விழிப்போடு இருக்க வேண்டும்.  சிலர் தங்கள் புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி இத்தனை சட்டங்களைக்கு அப்பால் எப்படி ஊழல் செய்யலாம் என்று செயல்படுவார்கள்.  அவர்கள் தங்கள் அறிவை இப்படியும் பயன்படுத்துவார்கள். 

இதற்கு ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.  இந்த வரையறையைத் தாண்டிச் செய்தால் பிரச்சனை வராது என்பார்கள்.  ஆனால் வரையறை விரிவாகிக் கொண்டே இருக்கிறது.  இன்று இல்லை என்றால் நாளை பிரச்சனை வரத் தான் போகிறது தப்புவது கடினமய்யா.   தொழில்நுட்பம் தடயத்தை விட்டுச் செல்கிறது.  எத்தனை அதிகமாக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறதோ, நீங்கள் அமைப்புக்களை மாற்றலாம், மாற்றியிருக்கிறோம் மாற்ற முடியும்.  முயற்சி செய்யலாம்.  உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.  நன்றி சகோதரர்களே!!  கரவொலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version