
சபரிமலை மண்டல பூஜை மகரஜோதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக வருவதால் முதல்வர் உயர்நிலைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் திங்கள்கிழமை திருவனந்தபுரத்தில் நடைபெறும்.
சபரிமலை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நிலைமையை மதிப்பிடுவதற்கு முதல்வர் பினராயி விஜயன் உயர்மட்டக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டம் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த சில நாட்களாக தினமும் சுமார் 1 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளாக யாத்ரீகர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது..
கூட்டத்தில் தரிசன நேரம், கூடுதல் ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசிக்கப்படும் என்று தேவஸ்வம் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.நாளை மதியத்துக்கு மேல் சில அறிவிப்பு கட்டுப்பாடுகள் வரலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்