
திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், கனமழை எதிரொலியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.