
நாளை உலகம் முழுவதும் 52,000 திரைகளில் வெளியாகும் ‘அவதார் 2’.கேரளாவில் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம்.
25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் நாளை டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முதல் பாகத்தைப்போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.இந்தியாவிலும் அதிகாலைக் காட்சியில் ‘அவதார் 2’ திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், உலகளவில் இதுவரை வெளியான திரைப்படங்களில் ‘அவதார் 2’ திரைப்படம் மிகப்பெரிய வசூலை எட்டும் என சினிமா வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியாகிறது.அவதார் 2’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்று 160 மொழிகளில் வெளியாக உள்ளது. நாளை டிசம்பர் 16-ம் தேதி வெளியாக உள்ளதாக ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அந்த ட்ரெய்லர் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.
இந்த ‘அவதார் 2’ படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்துக்காக ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் சமயத்தில் பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் திரையரங்கு உரிமையாளர்களிடம் விநியோகஸ்தர்கள் அதிக ஷேர் கேட்டு வந்தனர்.
இதற்கு கேரளா தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதாவது முதல் இரண்டு வாரங்களில் இப்படத்தின் லாபத்தில் 60 சதவீத தொகையை வழங்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்களிடம் நிர்பந்தித்தனர். ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் அதை மறுத்து வழக்கமான தொகையை தான் தர முடியும் என தெரிவித்துவிட்டனர். இதனால் சிக்கல் நீடித்து வந்த நிலையில், இருதரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன் பாடு எட்டப்பட்டதால் படம் வெளியாவதில் சிக்கலில்லை என கூறப்படுகிறது. டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.