
ஆந்திர பிரதேசம் வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. வீட்டில் இருந்து தப்பி செல்ல முடியாததால் அனைவரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஆந்திர மாநிலம், மஞ்சரியாலா மாவட்டம், வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவய்யா (வயது 50), அவரது மனைவி பத்மா (45), மகள் மோனிகா (23). மோனிகாவுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. வீடு முழுவதும் தீ பரவியது. வீட்டில் இருந்த அனைவரும் தப்பி செல்ல முயன்றனர்.
அவர்களால் தப்பிச் செல்ல முடியாததால் அனைவரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயில் கருகி இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.