
இன்று தங்கம் விலை சற்று அதிகரித்து வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கம் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும், அதன் மீதான மோகம் மட்டும் பெண்களுக்கு சற்றும் குறையவில்லை. விஷேச நாட்களில் தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்பட்டாலும் மக்கள் அதை ஆர்வமாக வாங்கி செல்வார்கள்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ. 5,115-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2.20 விலை உயர்ந்து ரூ.74.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ வெள்ளியின் விலை ரூ.74,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது.