நாளை சனிக்கிழமை முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை துவங்குகிறது.இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்புகள் பள்ளிக்கல்வி ஆணையரிடம் வலியுறுத்தியதன் விளைவாகவிடுமுறை நாட்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் மற்றும் சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்புகள் பள்ளிக்கல்வி ஆணையரிடம் வலியுறுத்தின. இதையடுத்து விடுமுறை நாட்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், ஆடியோ மூலமாக இந்த செய்தியை ஆசிரியர்களுக்கும் தெரிவித்துள்ளனர்.