To Read it in other Indian languages…

Home சற்றுமுன் மதுரை: கல்லூரி மாணவர், இளைஞர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கைது!

மதுரை: கல்லூரி மாணவர், இளைஞர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கைது!

கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்

  • மதுரையில் கல்லூரி மாணவர்கள் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கைது!
  • 17ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்துகள் பறிமுதல்!

மதுரை: மதுரையில் கஞ்சா என்னும் போதை பொருளுக்கு பதிலாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது.

இதனையடுத்து ,மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவுப்படி தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் தலைமையில் போதை மாத்திரை விற்பனை கும்பலை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை காவல்துறையினர் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.
அதன்படி, மதுரை வைகை வடகரை பகுதியில் மதிச்சியம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ,அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களை சோதனை செய்ய நிறுத்தினர்.

அப்போது பைக்கில் வந்த இரு இளைஞர்கள் தப்பியோடினர். அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்த போது, மதுரை மாவட்டம், வடகாடுபட்டி கிராமத்தை சேர்ந்த தமிழழகன் (19). என்பதும், தமிழழகனின் நண்பர்களான விக்கிரமங்கலத்தை சேர்ந்த தினேஷ் மற்றும் கவாஸ்கர் என்ற வெள்ளையன் ஆகிய இருவரும் மருந்தாளுனருக்கு (D.Pharm) படித்த முரளிதாஜ்(27) என்பவருடன் வாட்ஸ் அப் மூலமாக தினேஷிற்கு பழக்கமாகி அதன் மூலம் போதை தரும் தூக்கமாத்திரை மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வந்ததாகவும் அதிர்ச்சி தகவலை கூறினர்.

இதை அடுத்து, தமிழழகனிடம் தொடர் விசாரணை நடத்தியதில் மதுரை அண்ணா நகர், தேவர் தெரு பகுதியில் முரளிதாஜ்(27) என்பவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கிருந்து மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அவரது வீட்டில் பதுக்கிவைத்திருந்த இருந்து 17,030 காலாவதியான மாத்திரகளை போதை மருந்திற்காகவும் காலாவதியான 105 டானிக் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தமிழழகன் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலின் தலைவனான முரளிதாஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில தலைமறைவாகியுள்ள தினேஷை தனிப்படையின் தேடிவருகின்றனர்.

கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

nine + thirteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version