அவதார்2 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளது.
இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது..
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியாகி, உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்த படம், ‘அவதார்’. அதன் 2ம் பாகம், ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் கடந்த 16-ம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியிடப்பட்ட, இந்தப் படம் இந்தியாவில், ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் , மலையாள மொழிகளில் வெளியானது. படம் பற்றிய விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் இந்தப் படம், 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது..