பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது ஆன்மா நற்கதியடைய பிரார்த்தித்து, திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் இன்று மாலை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
முன்னதாக, பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வெளியிட்ட இரங்கல் குறிப்பில்,
நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் தாயார் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும் வருத்தமும் அடைந்தேன். பிரதமரின் தாயாக இருந்தாலும் தன் மகனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத தாய்!
எனது தாயாரும் அவ்வாறே! என்னிடம் எதையும் கேட்டதில்லை! நானும் எதுவுமே கொடுத்ததில்லை!
இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறு எங்கும் காண முடியுமோ? அவர் மறைந்தது துயரமே! நமது பிரதமர் அவர்கள் துயரத்தில் நான் பங்கு கொள்கிறேன்! அன்னை ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்!
இறைவனடி,
இளையராஜா – என்று குறிப்பிட்டிருந்தார்ர்.