More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeசற்றுமுன்குமரி முதல் காஷ்மீர் வரை 2023 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்..
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    குமரி முதல் காஷ்மீர் வரை 2023 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்..

    கன்னியாகுமரியில் ஆங்கில புத்தாண்டு விடுமுறை நாளான இன்று பலஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 2023முதல்நாளில் முதல் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

    ஆங்கில புத்தாண்டு 2023 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு தற்போது விடிந்தபிறகும் வழிபாட்டு தலங்கள் சுற்றுலா இடங்களில் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் புத்தாண்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை காமராஜர் சாலை மூடப்பட்டது. இதனால் சென்னை மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை.

    இந்த நிலையில், தொடர் விடுமுறை, ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியா கேட், கேட்வே ஆப் இந்தியா, பாந்த்ரா பகுதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மக்கள். நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன.

    2023 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தலைநகர் டெல்லி உள்பட முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு களைகட்டியிருந்தது. டெல்லியின் கன்னாட் பிளேஸ் மற்றும் இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிக அளவில் கூடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு புத்தாண்டைக் கொண்டாட குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நூற்றுக்கணக்கானோர் ராஜபாதையான கர்த்வயா பாத் பகுதியில் திரண்டதால் அந்த பகுதி சுற்றுலாத்தளம் போல் காட்சி அளித்தது. புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி பாதுகாப்பை உறுதி செய்ய தலைநகர் முழுவதும் 18,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதேபோல் தெற்கு மும்பையில் கேட்வே ஆப் இந்தியா, மரைன் டிரைவ் மற்றும் கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். மேலும் மும்பை புறநகர் பகுதிகளில், பாந்த்ரா, மார்வ் கடற்கரை பகுதிகளில் ஏராளமானோர் குவிந்தனர். மும்பை மாநகராட்சி, சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், கேட்வே ஆப் இந்தியா போன்ற முக்கிய கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

    ஹோட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.  இதேபோல் கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் களைகட்டியிருந்தன. பனாஜி நகரில் உள்ள நட்சத்திர விடுதிகளில் ஏராளமான மக்கள் ஆடிப்பாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

    இதேபோல் கேரளா மாநிலம் கோவளம் வர்க்கலா கொச்சி, இமாச்சல பிரதேச மாநிலம் மணாலி பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். 

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    seventeen + five =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Exit mobile version