
போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவையில் முழு உரையையும் தமிழில் ஆளுநர் பேசி பேசினார்.
அப்போது உரையாற்றிய அவர்; கடந்த 50 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலும், நீட் தேர்வு தேவையில்லை என்பதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. வடகிழக்கு பருவ மழையையும், புயலையும் சிறப்பாக கையாண்டதற்கு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு துறைகளில் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய முதலமைச்சருக்கு வாழ்த்துகள், நன்றி என பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு. மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை காக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது., மீனவர்களுக்கு முன்னுரிமை அளித்து தமிழ்நாடு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மீனவர்களுக்கு முன்னுரிமை அளித்து தமிழ்நாடு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கும் வகையிலும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. நீட் விலக்கு சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி பாராட்டு. நீதிக்கட்சி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவு திட்டம் படிப்படியாக பல்வேறு பரிமாணங்களுடன் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தற்போது தொடங்கி உள்ள காலை உணவு திட்டம் நாட்டுக்கே முன்மாதிரி திட்டமாக விளங்கி வருகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். பெரியார் நினைவு சமத்துவபுர திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது. சர்வதேச அளவிலான செஸ் போட்டியை தமிழ்நாடு அரசு பிரம்மாண்டமாக நடத்தியது. விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார். முதல்வர் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் கபடி, கால்பந்து, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாமல்லபுரம் அருகே துணைநகரம் உருவாக்கப்படும். 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும். சென்னை: சர்வதேச அளவில் திறன் கொண்டவர்களாக இளைஞர்களை மாற்றுவதற்கு நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 3 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். படிப்புக்கேற்ப வேலை, தொழில் நிறுவனங்களில் பணியில் சேரும் வகையில் மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப்பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 1.35 கோடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. மினி டைடல் பார்க் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறது. கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. ”வாழிய தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த்” என தனது உரையை நிறைவு செய்தார் ஆளுநர் ரவி.
இந்த நிலையில் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை,”ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்துகொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்தை புரியாமல் ஆளுநர் விளையாடிக் கொண்டிருக்கிறார். தமிழர்களுக்கு எதிராக இது போன்று எந்த ஆளுநரும் செயல்பட்டதில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.
