Home அடடே... அப்படியா? பொய்ச் செய்தி பரப்பிய இணையதளத்துக்கு தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கம் கண்டனம்!

பொய்ச் செய்தி பரப்பிய இணையதளத்துக்கு தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கம் கண்டனம்!

சிதம்பரம் சித்சபேசன் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் மஹாபிஷேகம் நடைபெற்ற அன்று என்னால் காலதாமானது என்ற பொய் செய்தி ஆன்மீக மக்கள் மத்தியில்

பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா குறித்து கற்பனையாக செய்தியை எழுதிப் பரப்பியுள்ள இணையதளத்தின் செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் சார்பில் அதன் ஐடி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் விநோத் அமர்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சிதம்பரம் சித்சபேசன் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் மஹாபிஷேகம் பாஜக மூத்த தலைவர் திரு.ஹெச்.ராஜா அவர்களால் கால தாமானது என பொய் செய்தி பரப்பிய One India Tamil நிறுவனத்தில் செயல் ஏற்புடையதல்ல மாறாக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஒரு கண்ணிய மிக்க தேசியக் கட்சியின் தேசிய பொறுப்பில் இருக்கும் சிறந்த தேசியவாதி திரு.ஹெச்.ராஜா அவர்கள் மீது அவதூறு பரப்பும் செயல் எதோ உள்நோக்கம் கொண்டது போல தோன்றுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இதை தோலுரிக்க வேண்டியது எமது தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் கடமை.

தமிழகத்தின் ஒரு தேசிய கட்சியின் அடையாளமாக பார்க்கப்படும் ஒருவரை இது போன்ற பொய் செய்திகளின் மூலம் திரு.ஹெச்.ராஜா போன்ற தேசிய சிந்தனை கொண்ட தலைவர்கள் மீது களங்கம் ஏற்படுத்தி மக்கள் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை சிதைப்பதும்

தேசத்தின் நான்காவது தூணான ஊடகங்கள் உண்மை செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க பயன்பட வேண்டுமே தவிர பொய் செய்திகளை பரப்பி ஒட்டு மொத்தமாக ஊடக மாண்பினை ஊடக தர்மத்தினை அழித்து மக்கள் நம்மீது வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையை சீர்குலைப்பதும் ஏற்புடையதல்ல.

பலமுறை இதுபோன்று One India Tamil நிறுவனம் ஊடகதர்மத்தை மீறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இனிமேல் இவ்வாறு நடைபெறா வண்ணம் One India Tamil நிர்வாகம் செய்தி வெளியிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

உடனடியாக One India Tamil நிறுவனம் அந்த பதிவை நீக்கி இச்செயலுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் தேசிய ஊடகவியலாளர்கள் நலச்சங்கம் கேட்டுகொள்கிறது…” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தக் கற்பனைச் செய்தி குறித்து ஹெச்.ராஜாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதில்,

5 ம் நிதி இரவு தேர் கோவிலுக்கு வந்துசேர இரவு 11.30 ஆனது. பின் மங்கலாட்சதை, லட்சார்ச்சனை முடிய இரவு 2.30. அதற்குப்பின் சிறிது ஓய்வுக்குப்பின் ஆருத்ரா அபிஷேகங்கள் துவங்கின. விபூதி அபிஷேகம் நடக்கும் போது நான் வந்தேன் எனவே onindia Tamil பொய்களை பரப்பும் இழிசெயலில் ஈடுபட வேண்டாம்.

இந்த @thatsTamil பொய்களை பரப்பவது என்பது அவர்களுடைய வாடிக்கை. ஏற்கனவே என்னை பற்றி பொய் பரப்பியதற்கு நான் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்த பிறகு அந்த பதிவையே நீக்கிய சம்பவமும் நடந்தது.

சிதம்பரம் சித்சபேசன் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் மஹாபிஷேகம் நடைபெற்ற அன்று என்னால் காலதாமானது என்ற பொய் செய்தி ஆன்மீக மக்கள் மத்தியில் எனக்கு இருக்கின்ற மதிப்பை குறைக்கும் விதத்தில் இது பதிவிடப்பட்டிருக்கிறது.

எனக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தால் கூட அன்று பல திருமணங்கள் இருந்தால் எனக்காக முகூர்த்த நேரத்தை மாற்ற வேண்டாம் என தெரிவிப்பேன். அப்படி இருக்கும்போது திருக்கோயிலில் நடக்கின்ற பூஜைக்கு நாம் வரும் வரை காத்திருக்க வேண்டுமா? அவசியமே இல்லை.

எல்லா பக்தர்களை போல நானும் ஒரு பக்தராகவும் எங்கள் கட்சியை சார்ந்த
சட்டமன்ற உறுப்பினர் சகோதரி திருமதி Dr.சரஸ்வதி அவர்களும் கலந்து கொண்டார்கள். எந்தவித காலதாமதமும் ஏற்படவில்லை என்பதும் உண்மை. நிலைமை இவ்வாறு இருக்க @thatsTamil தளத்தில் பதியப்பிட்டிருக்கிற செய்தி, எனக்காக பூஜை காலதாமதம் செய்யப்பட்டது என்பது வடிகட்டிய பொய்.
உடனடியாக @thatsTamil நிறுவனம் அந்த பதிவை நீக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் இந்த பொய் செய்தி பற்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கை வரும்… என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version