திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கேரளா வந்துள்ளனர். இலங்கைக்கு எதிராக நாளை போட்டி நடைபெறவுள்ள நிலையில் கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், கோயில் வெளியே இந்திய கிரிக்கெட் வீரர்கள் குழுவாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.