தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் குடியரசுத் தலைவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. டெல்லி செல்லும் கவர்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஆலோசனை நடத்த இரண்டு நாள் பயணமாக டெல்லி க்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சென்றார்.
தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. கடந்த 12ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த திமுக குழு, 20 நிமிடங்கள் அவருடன் பேசியது. பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் குடியரசுத் தலைவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதே போன்று, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கு, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மீண்டும் 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார்.
டெல்லி செல்லும் கவர்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.