ஜல்லிக்கட்டு காயமடைந்த இளைஞர் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். தமிழக ஜல்லிக்கட்டு போட்டி மரணம் எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது.பொங்கலையொட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 450 பேர் காயமடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காயமடைந்த இளைஞர் சிவக்குமார் (21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர், அதே மாவட்டத்தில் உள்ள வடசேரி பள்ளப்படியை சேர்ந்தவர். ஆர்.டி.மலையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டி வலது கண் பார்வையை சிவக்குமார் இழந்தார். இதைதொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
பொங்கலையொட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 450 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.