கேரளா பினராயி விஜயனை சமூகவலைதளத்தில் விமர்சித்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை கல்வி நிறுவனம் தொடர்பான பிரச்சினையில் பினராயி விஜயனை போலீஸ் அதிகாரி உமேஷ் விமர்சனம் செய்தார். போலீஸ் அதிகாரி உமேஷ் கோழிக்கோட்டில் இருந்து பத்தினம்திட்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கேரளாவில் கல்வி நிறுவனம் தொடர்பான பிரச்சினையில் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனை போலீஸ் அதிகாரி உமேஷ் விமர்சனம் செய்தார். அதனை அவர் சமூக வலைதளத்திலும் பதிவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் அவரிடம் விளக்கம் கேட்டனர். இதையடுத்து அவர் கோழிக்கோட்டில் இருந்து பத்தினம்திட்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கேரளா கொச்சி விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்..
கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குவைத்தில் இருந்து கேரளா வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குவைத்தில் இருந்து கொச்சிக்கு வந்த விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் 1978.89 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.89 லட்சம் ஆகும். கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளா 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- தடுக்க தவறிய தாய் கைது..
11 வயது சிறுமி பள்ளி வகுப்பறையில் சோகத்துடன் காணப்பட்டார் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியின் தாயாரை கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பள்ளி வகுப்பறையில் சோகத்துடன் காணப்பட்டார். ஆசிரியைகள் அவருக்கு கவுன்சிலிங் வழங்கியபோது தனக்கு தாயாரின் நண்பர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி சிறுமியின் தாயாரை கைது செய்தனர். சிறுமிக்கு நடந்த பாலியல் தொல்லையை தடுக்க தவறியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.