More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeசற்றுமுன்குஜராத் கோத்ரா கலவர வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை..
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    குஜராத் கோத்ரா கலவர வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை..

    குஜராத் கோத்ரா கலவர வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.குஜராத் கோத்ரா கலவரத்தின் போது, 2 குழந்தைகள் உள்பட 17 பேரைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 22 பேரை விடுதலை செய்து பஞ்ச்மஹால் மாவட்ட ஹலோல் நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2002 ஆம் ஆண்டு பஞ்சமஹால் மாவட்டத்தின் டெலோல் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் அனைவரையும் அம்மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. இவர்களில் 8 பேர் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது இறந்ததால் இவர்கள் மீது விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. சாட்சிகளை தேடும் முயற்சியில் ஒரு ஆற்றின் கரையில் இருந்து எலும்புகளை போலீசார் மீட்டனர். ஆனால் அவை இறந்தவர்களின் அடையாளத்தை கண்டறிய முடியாத அளவுக்கு எரிந்து இருந்தது. இந்த வழக்கில் சாட்சியாக இருந்த இறந்தவர்களின் உடல்கள் சாட்சியங்களை அழிக்கும் நோக்கத்துடன் எரிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் குற்றம் சாட்டினர்.

    இதனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, குற்றவாளிகள் 22 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும், அதில் 8 பேர் விசாரணையின்போதே இறந்துவிட்டதாகவும் சோலங்கி கூறியுள்ளார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    five × four =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Exit mobile version