மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் 29 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ‘முன்மாதிரியான மற்றும் குறைபாடற்ற செயல்திறன் சேவைக்காக’ குடியரசுத் தலைவர் விருதுகளைப் பெறுவார்கள் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களில் முதன்மை தலைமை ஆணையர், ஆணையர், கூடுதல் இயக்குநர் ஜெனரல், இயக்குநர், கூடுதல் இயக்குநர், இணை ஆணையர், உதவி ஆணையர், தலைமை கணக்கு அதிகாரி, கண்காணிப்பாளர், மூத்த புலனாய்வு அதிகாரி, இன்ஸ்பெக்டர் மற்றும் எழுத்தர் எனப் பணிபுரியும் அதிகாரிகள் அடங்குவர். இவர்கள் பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் துறையில் சேவை புரிந்தவர் ஆவர்.
ஒவ்வொரு ஆண்டும், சிபிஐசியின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், ஆற்றிய சிறப்புமிக்க சேவைக்காக’ (Exceptionally Meritorious Service rendered at the Risk of Life) குடியரசுத் தலைவர் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த ஆண்டு, 29 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியரசுத் தலைவரின் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
