நாட்டின் 74வது குடியரசு தினமான இன்று டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பிரதமர், துணை குடியரசு தலைவர், ஒன்றிய அமைச்சர்கள், ராணுவவீரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி ஆகியோர் பங்கேற்றனர்.
நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய பேர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் குதிரைப்படை சூழ வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு-வை பிரதமர் மோடி வரவேற்றார். குடியரசு தலைவருடன் வந்த எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசிவை பிதாமற் மோடி வரவேற்றார்.
பதவியேற்றபின் முதன் முறையாக திரௌபதி முர்மு மூவர்ண கோடியை ஏற்றினார். முதன் முறையாக கடமை பாதையில் குடியரசு தினவிழா நடைபெற்றது. கொடியேற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. விஜய் சவுக் பாதையில் இருந்து கடமை பாதை வழியாக அணிவகுப்பு நடத்தப்பட்டது. கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றார்.
74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் சரியாக காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி போர்வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்த குறிப்பேட்டில் பிரதமர் மோடி தனது அஞ்சலிக் குறிப்பினை பதிவிட்டார். தொடர்ந்து அங்கிருந்து குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் கர்தவ்ய பாதைக்கு சென்றனர்.
போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு அதிபர் மாளிகையில் இருந்து விழாவிற்குப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் படாக் அல்-சிசி ஆகியோரை வரவேற்றார். குடியரசு தின விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வண்ணமயமான தலைப்பாகை அணிந்து வந்திருந்தார்.