To Read it in other Indian languages…

Home சற்றுமுன் பழனி மலை முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

பழனி மலை முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

images 91 5 - Dhinasari Tamil

பழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் ராஜகோபுரத்தில் குடமுழுக்கு நடக்கிறது. இன்று பக்தர்களுக்கும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்தது . தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு முருகப்பெருமான் மலை மீது தண்டாயுதபாணியாக காட்சி அளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

சிறப்பு வாய்ந்த பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் பழனி முருகன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி காலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. பின்னர் காலை 7.15 மணிக்கு பெருநிறை வேள்வி, தீபாராதனை, கட்டியம், கந்தபுராணம், பன்னிரு திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடந்தது.

இன்று காலை 8.15 மணிக்கு மங்கல இசையுடன் யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து தேவாரம் பன்னிசை, திருப்புகழ் பாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமியின் ராஜகோபுரம், தங்கவிமானத்தில் உள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

அதன்பிறகு 8.45 மணிக்கு மலைக்கோவிலில் உள்ள தெய்வங்களின் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் மதியம் 12.05 மணிக்கு அன்னப்படையல், தீபாராதனை, திருமறை, சிவஆகமம், கட்டியம், கந்தபுராணம், திருமுறை விண்ணப்பம் பாடப்படுகிறது.

16 ஆண்டுகளுக்கு பிறகு பழனியில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர். மேலும் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போலீஸ் சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பழனி கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை-பழனி, கோவை-திண்டுக்கல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. மதுரை, பழனி முருகன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதேபோல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கும்பாபிஷேகம், தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை-பழனி மற்றும் பழனி வழியே திண்டுக்கல்-கோவைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

5 நாட்கள் இந்த ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி மதுரை-பழனி இடையே இயக்கப்படும் ரெயில் (வண்டி எண் 06080) மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படுகிறது. சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக 12.30 மணிக்கு பழனி வந்தடைகிறது. பின்னர் பழனியில் இருந்து ரெயில் (வண்டி எண் 06079) மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றடைகிறது.

இதேபோல் கோவை-திண்டுக்கல் ரெயில் (எண் 06077) காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியக 11.38 மணிக்கு பழனி வந்தடைகிறது. பின்னர் பழனியில் இருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்திரம் வழியாக 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடைகிறது. பின்னர் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரெயில் (எண் 06078) மதியம் 2.55 மணிக்கு பழனி வருகிறது. பின்னர் 3 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை, பொள்ளாச்சி வழியாக மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடைகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

one × four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version