To Read it in other Indian languages…

Home சற்றுமுன் வசூலில் சாதனை படைத்த பதான்..

வசூலில் சாதனை படைத்த பதான்..

images 2023 01 27T075812.206 - Dhinasari Tamil

சர்ச்சையில் சிக்கிய ‘பதான்’ படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘பதான்’. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.

மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இடம்பெற்ற ‘அழையா மழை’ பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே

காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.

மேலும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்தன. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நேற்று இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் பதான் படம் வெளியான முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

2 − one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version