To Read it in other Indian languages…

Home சற்றுமுன் நமது கலாசாரம் நமது அடையாளம்: ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

நமது கலாசாரம் நமது அடையாளம்: ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

PFI-இன் குறிப்பிடத்தக்க இருப்பின் அடையாளமாக, இந்திய அரசு அதைத் தடைசெய்த உடனேயே மாநிலத்தில் டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை

ஆளுநர் ரவி அவர்களின் குடியரசு தின உரையின் சில அம்சங்கள்:

வெளிநாட்டு தொடர்புகளைக் கொண்ட பயங்கரவாத அமைப்பான PFI-இன் குறிப்பிடத்தக்க இருப்பின் அடையாளமாக, இந்திய அரசு அதைத் தடைசெய்த உடனேயே மாநிலத்தில் டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் மேலும் கவனிக்கத்தக்கவை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குறிப்பாக தலித் பெண்களுக்கு எதிரானவற்றில் குறைவான தண்டனை பதிவாவதை ஏற்க முடியாது.

ஒரு கோயில் என்பது ஆன்மிகத்தலமாகும். அது வெறும் கலை, கலாசார பகுதி அல்ல. ஆன்மிகத்தை எடுத்து விட்டால் அது ஆன்மா இல்லாத உடல் போல வேகமாக சிதைந்து விடும்.

நமது கலாசாரம் என்பது நமது அடையாளம். இசை, நடனம், பாடல்களை உள்ளடக்கிய நமது கலாசாரம் ஆன்மிகத்தில் வேரூன்றியுள்ளது. அனைத்தும் ஆலயங்களைச் சுற்றிலும் வளர்ந்து தழைத்துள்ளன.

ஆலயங்களின் மோசமான பராமரிப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த யுனெஸ்கோ ஆணையத்தின் கருத்துகள் அவசரமாகவும் நேர்மையாகவும் கவனிக்க உகந்தவை.

முன்னதாக, குடியரசு நாளில் நமது ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம். பாரத இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை காத்து, எதிரி நடவடிக்கைகளை முறியடித்து இன்னுயிரை தியாகம் செய்த தீரம் மிக்க நம் வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. அவர்களின் தியாகங்களுக்காக தேசம் எப்போதும் பெருமிதம் கொள்ளும்.

இந்திய தேசிய சுதந்திர போராட்டத்தின் போது எல்லா இடர்பாடுகளுக்கும் எதிராகத் தங்களுக்குத் துணையாக நின்ற இந்தப் பெரிய மனிதர்கள் மற்றும் பெண்களின் குடும்பத்தினரை நாம் மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம்… என்று குறிப்பிட்டிருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

five + 14 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version