பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படைவீடு கோவில்களில் முக்கிய ஸ்தலமான அச்சன்கோவிலில்
வெள்ளிக்கிழமை புஷ்பாஞ்சலி விழா கோலாகலமாக நடந்தது.இரண்டு என்பவர்களால் சுமார் மூன்று மணிநேரம் ஐயப்பனுக்கு நடந்த புஷ்பாஞ்சலியை காண அச்சன்கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டையில் இருந்து 25கி.மீ தொலைவில் அடர்ந்த மலையில் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஐய்யப்பன் கோவில்களில் ஒன்றான அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில் உள்ளது.
இந்த கோவில் பரசுராமரின் கைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பிரதிஷ்டை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே தை மாதத்தில் ரேவதி நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் புஷ்பாஞ்சலி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டும் அச்சன்கோவிலில் ஜனவரி 27 ஆம் தேதி தை ரேவதி நாளில் இரவு புஷ்பாஞ்சலி வழிபாடு அதி விமர்சையாக துவங்கி நடைபெற்றது .
முன்னதாக சபரிமலை தந்திரி கண்டரரு மோகனரரு தலைமையில் கலச பூஜையும் களப பூஜையும் நடத்தி ஐயப்பனுக்கு கலசாபாபிஷேகம் களபாபிஷேகம் வேத பாராயண முறைப்படி விமர்சையாக நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நெற்றி பட்டம் கட்டிய யானை மீது ஐயப்பன் விக்ரகம் ஏற்றி கோவில் பிரகாரம் சுற்றிவர ஷீவேலி வழிபாடும் மாலை ஆறு முப்பதுக்கு கோவில் முழுவதும் தீபங்கள் ஏற்றி மகாதீப ஆராதனை வழிபாடும் நடைபெற்ற பின் அச்சன்கோவில் ஐயப்பனுக்கு இரண்டு டன்னுக்கும் மேல் வண்ணமயமான மனக்கும் பூக்களால் புஷ்பாஞ்சலி நடந்தது.
இந்த புஷ்பாஞ்சலியில் ராஜபாளையம் தென்காசி கோயம்புத்தூர் திருச்சி மதுரை கொல்லம் திருவனந்தபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பூக்களை கொண்டு வந்து அச்சன் கோவில் பிரகாரத்தில் குவித்து தர்மசாஸ்தாவுக்கு புஷ்பாஞ்சலி அபிஷேகம் செய்தது தனிச்சிறப்பாகும்.