மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா என்ற இடத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் – சுகோய் சு மற்றும் 30 மற்றும் மிராஜ் 2000 – நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒரு விமானி பலியானது தற்போது தெரியவந்துள்ளது.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை இரு விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டபோது, விபத்துக்குள்ளானதாகவும், ஒரு விமானத்திலிருந்து இரண்டு விமானிகள் வெளியே குதித்து உயிர்பிழைத்ததாகவும் மற்றொரு விமானியின் உடல் பாகங்கள் சம்பவ இடத்தில் இருந்து கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுகோய் விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய விமானிகள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ஒரு விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. பயிற்சியின்போது, இரண்டு விமானங்களும் வேகமாக இயக்கப்பட்டு, பனி மூட்டம் காரணமாக ஒன்றோடு ஒன்று மோதியிருக்கலாம் என்று பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிராஜ் விமானத்தில் ஒரு விமானி இருந்துள்ளார். சுகோய் விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்துள்ளனர். பலியான விமானியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.