ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகியாக பதவி வகித்து வரும் கே.எஸ் தென்னரசு(65) அறிவிக்கப்பட்டுள்ளார். 65 வயதான தென்னரசு இதற்கு முன்பு அதே தொகுதியில்2001, 2016இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.இவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் கூடுதல் பலம் கிடைக்கும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த நிலையில் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
தற்போது ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக பதவி வகித்து வரும் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 65 வயதான தென்னரசு இதற்கு முன்பு அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதால் இருவருக்கும் இடையே வலுவான பிரச்சாரம் தொகுதியில் இருக்கும். மேலும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் காங்கிரஸ் அதிமுக சரிசமமாக மோதும் வாய்ப்பு உள்ளது