வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கை மட்டக்களப்பு – திரிகோணமலை இடையே கரையை கடந்தது.பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.மழையால் மூன்று மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.வேதாரண்யம் பகுதியில் நெல்வயல்கள் தண்ணீரில் மிதந்தது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து இலங்கை சென்றது.இதன் காரணமாக, சென்னை, கடலூர், நாகை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திருப்பூர், தேனி, தஞ்சை, உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ததாக என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக மயிலாடுதுறை நாகை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது வேதாரண்யம் பகுதியில் தொடர் மழையால் அறுபடைக்கு தயாராகி வரும் வயல்களில் நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மிதந்ததால்
விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வேதாரண்யம் பகுதியில் நெல் அறுவடை தருணத்தில் கொட்டித் தீர்க்கும் தொடர் கன மழையின் காரணமாக நெல் கதிர்கள் பல ஏக்கர் பரப்பளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.நாகை மாவட்ட பகுதியில் வங்கக் கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் மழைப் பெய்து வருகிறது.வடக்கு திசையில் இருந்து பலமான தரைக்காற்றும் வீசியது.
தொடர் கன மழை நீடிப்பதால் அறுவடை செய்யப்பட்டு வரும் சம்பா பருவ நெல் சாகுபடி வயல்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கச்செய்துள்ளது.
நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் தொடரும் மழையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மழை தொடர்ந்தால் ஈடுசெய்ய முடியாத பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்திக்க நேரிடும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டு நகர்ந்ததால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.