
ஈரோட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி விடிய விடிய அவசர ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் வெளியான உத்தரவு படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வெள்ளி கிழமை தீர்ப்பு வழங்கினர். அப்போது, அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் கூறினர். இந்த நிலையில் குறைந்த கால அவசாசமே உள்ளதால் பொதுக்குழுவை கூட்டாமலேயே பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் ஈரோடு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி சட்ட ஆலோசகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்
உச்சநீதிமன்றத்தில் வெளியான உத்தரவு படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சென்னைஅதிமுக தலைமை அலுவலகம் வந்து இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஈரோடு இடைத்தேர்தலுக்காக ஓ. பன்னீர்செல்வம் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவை கூட்ட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்திற்கு மட்டும் இது பொருந்தும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவில் இறுதி செய்யும் என்றும் வேட்பாளரை தேர்வு செய்யும் விவகாரத்தில் பொதுக்குழுவில் வாக்கு எடுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை அவை தலைவர் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும், தற்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். சென்னை தவிர பிற மாவட்டங்களில் மாவட்ட செயலாளர் பொறுப்பாளர்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் வழங்கப்படும் என்றும் உறுப்பினர்களின் வேட்பாளர் ஒப்புதல் படிவம் திங்களன்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.