
பௌர்ணமி, தைப்பூசத்தை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு இன்றும் நாளையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மதுரை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக கடந்த 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்கிடையே பருவநிலை மாற்றம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 3, 4 ஆகிய தேதிகளில் சதுரகிரி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் இன்றும் நாளையும் பிப்5,6 இருநாள் தைப்பூசம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பக்தர்கள் வழக்கமான விதிமுறைகளை ஏற்கவும்.