ஈரோடு காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

940184 1 - 2026

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்களின் மனுக்கள் இன்று வேட்புமனு பரிசோதனையில் ஏற்கப்பட்டது.ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மனு வாபஸ் வாங்குவதற்கு முன்பே நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிகாங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கி செவ்வாய் கிழமை வரை நடந்தது.

இதில் 120 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. இதில் மதியம் 12.30 மணி வரை காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. வாபஸ் பெற போவதாக அறிவிக்கப்பட்ட அ.ம.மு.க. வேட்பாளர் மனுவும் ஏற்கப்பட்டது. ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மனு வாபஸ் வாங்குவதற்கு முன்பே நிராகரிக்கப்பட்டது. வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img