
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு பழனி,சென்னை, திருநெல்வேலி, தென்காசி உள்பட 3 மாநிலங்களில் 60 இடங்களில் இன்று என்.ஐ.ஏ அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி ஏர்வாடியிலும், தென்காசி அச்சன்புதூரிலும் தின்டுக்கல் பழனியில் உம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் சுமார் 60 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
பழனி அடுத்துள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ராஜா முகமது ( 35) என்பவர் வீட்டிலும் இன்று சோதனை நடைபெற்றது. இவர் தனது தந்தையுடன் அதே பகுதியில் வசித்து வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை அவரது வீட்டுக்கு உள்ளூர் போலீசாருடன் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் இதே பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டரான பி.பி.ஐ. அமைப்பின் முன்னாள் நிர்வாகியிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி சென்றது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கொடுங்கையூர், மண்ணடி உள்பட 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் டவுன் காரிக்கான்தோப்பு பகுதியில் உள்ள மன்சூர் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல், திருநெல்வேலியின் ஏர்வாடியிலும், தென்காசியின் அச்சன்புதூரிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா என மொத்தம் 3 மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.